பெங்களூரில் தொழில்நுட்பத் திறன் பயிற்சியில் கலந்துகொள்வதற்காக செல்லும் 45 நபர்களின் தொழிற்சாலைப் பயணத்தை தூத்துக்குடி மாவட்ட இளம்பகவத் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பெங்களூரில் அமைந்துள்ள டொயோட்டா டெக்னிக்கல் பயிற்சி நிலையத்தில் நடைபெறும் திறன் பயிற்சியில் கலந்துகொள்வதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 4 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 16 நபர்கள், 2 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் 20 நபர்கள் தொழில்நுட்ப பயிற்சியாளர்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழில்நுட்பப் 9 பணியாளர்கள் என 45 நபர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தும் விதமாக செல்லும் தொழிற்சாலைப் பயணத்தை (Industrial Exposure Visit) மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்ற இந்நிகழ்வின் போது, உதவி இயக்குநர் (திறன் மேம்பாடு) ஏஞ்சல் விஜயநிர்மலா, பொது மேலாளர் (மாவட்ட தொழில் மையம்) ஸ்வர்ணலதா, துணை ஆட்சியர் (பயிற்சி) சத்யா உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


