தூத்துக்குடி மாநகரில் அமைந்துள்ள தெப்பக்குளத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகரின் மத்திய பகுதியில் பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரா் ஆலய தெப்பக்குளம் உள்ளது. இந்தக் குளத்தில் பல்வேறு வகையான மீன்கள் வளர்க்கபட்டு வருகிறது. தற்போது குளத்தில் காலி பாட்டில்கள், குப்பைகள், தேங்கி அசுத்தமாக காணப்படுகிறது.
இதனால் அங்குள்ள மீன்களுக்கு பாதிப்பு ஏற்படும். மேலும் மீன்கள் இறந்தால் குளத்து நீரில் சுகாதார சீர்கேடு ஏற்படும். எனவே குளத்தை தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


