வல்லநாடு சிவன் கோவிலில் திருக்கைலாய அரங்க அமைப்பில் திருவாசக முற்றோதுதல் வேள்வி நடந்தது. வல்லநாட்டில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அருள்மிகு திருமூலநாதர் திருக்கோவில் உள்ளது. கல்லிடைக்குரிச்சி மாணிக்கவாசகர் வழிபாட்டுக் குழு சார்பில் அமைக்கப்பட்ட திருக்கைலாய அரங்கில் திருவாசக ஞான வேள்வி முற்றோதுதல் விழா நடந்தது. காலை எட்டுமணிக்குத் துவங்கிய இவ்வேள்வியில் திருவாசகத்தில் உள்ள 51 பதிகங்களை சிவபக்தர்கள் மனமுருகப் பாடினர். இதில் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருநெல்வேலி, வல்லநாடு, கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த சிவனடியார்கள் திரளாகக் கலந்துகொண்டனர். சென்னை முகப்பேர் காந்திமதிநாதன் சாந்தி தம்பதி, கல்லிடைக்குரிச்சி மணிவாசகர் வழிபாட்டுக் குழுவினர் மற்றும் வல்லநாடு திருமூலநாதர் பக்தர் பேரவையினர் திருவாசக முற்றோதுதலுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.அர்ச்சகர்கள் சண்முகசுந்தர பட்டர், சந்தோஷ் பட்டர், ஹரி பட்டர் ஆகியோர் சுவாமி அம்பாளுக்குச் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகளை நடத்தினர்.


