மத்திய அரசிடம் தாமிரபரணியை காக்க நிதிக்கேட்டு கோரிக்கை வைத்த நெல்லை எம்.பி. ராபர்ட் புருஸ்க்கு தாமிரபரணி ஆர்வலர், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பாராட்டு தெரிவித்தார்.
தாமிரபரணி நதியை சீரமைத்து மீட்டெடுக்க முதல் கட்டமாக ரூ 570 கோடி நிதியை ஓதுக்க வேண்டும் என்று திருநெல்வேலி காங்கிரஸ் எம்.பி.ராபர்ட் புரூஸ் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தில்லியில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலிடம் எம்.பி ராபர்ட் புரூஸ் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனுவை நேரில் அளித்தார். அவரிடம் கிராமபுறங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீர் வழங்கும் திட்ட நிதி மூலமாக தேவையான பணத்தினை வழங்குவதாக மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் உறுதியளித்தார்.
இதுகுறித்து நெல்லை மாவட்ட எம்.பி. ராபர்ட் புருஸ் கூறும் போது விக்கிரமசிஙக்புரம் முதல் ஆத்தூர் வரை உள்ள இடங்களில் இந்த நதியில் கழிவு நீர் கலப்பதால் தாமிரபரணி நதி நீர்மாசு அடைந்தாலும் திருநெல்வேலி மாவட்டம் 79 சதவீதமும் தூத்துக்குடி மாவட்டம் 21 சதவீதம் மக்களின் வாழ்வாரதாத்திற்கும் , 8600 ஏக்கர் நிலத்தின் பாசனத்திற்கு பயனளிக்கிறது. இந்த நதியை மறுசீரமைப்பு செய்தவற்கு முதல் கட்டமாக ரூ 570 கோடியை ஒதுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் அவர்களிடன் நேரடியாக மனுவை கொடுத்தேன். அவர் கிராம புறங்களுக்கான பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீர் வழங்கும் திட்டத்தின் கீழ் தாமிரபரணியை பாதுகாக்க தேவையான நிதியை கொடுப்பதாக உறுதியளித்தார். இதற்கான நடவடிக்கைகளில் விரைவில் இறங்குவோம் என்று கூறினார்.
தாமிரபரணி ஆற்றினை மீட்டெடுக்க ஒவ்வொருவரும் ஒவ்வொருநடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தாமிரபரணியை மீட்டெடுக்க சட்ட போராட்டம் நடத்திவரும் சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான முத்தாலங்குறிச்சி காமராசு ராபர்ட் புருஸ் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து பொன்னாடை போர்த்தி அவர் எழுதிய “தவழ்ந்து வரும் தாமிரபரணி” நூலை கொடுத்தார். தாமிரபரணியை காப்பாற்ற மத்திய அரசு மூலம் நிதி பெற்ற தர நடவடிக்கை எடுக்கும் அவருக்கு நன்றியை தெரிவித்தார். அவருடன் தமிழ்ச்சான்றோர் பேரவை நெல்லை மாநகரத் தலைவர் வழக்கறிஞர் சுதர்சன், பாளை வட்டார காங்கிரஸ் தலைவர் டியூக் துரை ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


