*மருதூர் அணைக்கட்டில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிறுவர்களை எச்சரித்து அனுப்பிய மாவட்ட ஆட்சியர். அணைக்கட்டில் தண்ணீர் சீறிப்பாயும் அழகை தனது செல்போனில் படம் பிடித்தார்.*
தாமிரபரணி ஆற்றின் தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் அணைக்கட்டாகவும், 4000 அடி நீளம் கொண்ட அணைக்கட்டாகவும் உள்ளது மருதூர் அணைக்கட்டு. கடந்த இரண்டு தினங்களாக பெய்த தொடர் மழை காரணமாகவும், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும் மருதூர் அணைக்கட்டில் சுமார் 70 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் மழை வெள்ளம் குறித்து இன்று தாமிரபரணி ஆற்றின் கரையோரம், அணைக்கட்டு பகுதிகளை ஆய்வு செய்ய வருகை தந்தார்.
அவர் மருதூர் அணைக்கட்டிற்கு வந்தபோது அங்கு ஏராளமானோர் அணைக்கட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்று சில சிறுவர்களும் ஆபத்தை உணராமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் சிறுவர்களுக்கு அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் ஆற்றில் வரும் தண்ணீர் குறித்து அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
அப்போது அங்கு நின்று பார்த்துக் கொண்டிருந்த மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தாமிரபரணி ஆற்றின் மருதூர் அணைக்கட்டில் சீறிப்பாயும் தண்ணீரை பார்த்து ரசித்தார். மேலும் மருதூர் அணைக்கட்டு குறித்து விபரத்தை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
உடனே தனது செல்போனை எடுத்து மருதூர் அணைக்கட்டில் தண்ணீர் செல்லும் காட்சிகளை படம் பிடித்து ரசித்தார்.


