தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வாகனங்கள் ஆத்தூர் பாலத்தை கடந்து செல்வதை தவிர்க்க வேண்டும் முக்காணியில் இருந்து ஏரல் வழியாக ராஜபதி குரும்பூர் வழியாக திருச்செந்தூர் செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்தில் சில மாற்றங்களை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வாகனங்கள் புளியங்குளம் விளக்கிலிருந்து திரும்பி கொங்கராயகுறிச்சி ஸ்ரீவைகுண்டம் வழியாக செல்ல வேண்டும்.
கோவில்பட்டி இளையரசனேந்தல் ரயில்வே சுரங்க பாதையில் வாகனங்கள் செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது


