தொடர் மழை காரணமாக வினாடிக்கு 80 ஆயிரம் கன அடி நீர் மருதூர் அணைக்கட்டை தாண்டி செல்கிறது.
வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் நேற்றைய தினம் முதல் தமிழகத்தின் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனஅடி நீர் தாமிரபரணி ஆற்றில் வருகிறது.
இந்த நிலையில் தாமிரபரணி ஆற்றின் தூத்துக்குடி மாவட்டத்தின் முதல் தடுப்பணையாகவும், 4000 அடி நீளம் கொண்ட மிக நீளமான அணையாகவும் விளங்குகிறது கலியாவூரில் உள்ள மருதூர் அணைக்கட்டு.
இந்த நிலையில் தாமிரபரணி ஆற்றின் தூத்துக்குடி மாவட்டத்தின் முதல் தடுப்பணையாகவும், 4000 அடி நீளம் கொண்ட மிக நீளமான அணையாகவும் விளங்குகிறது கலியாவூரில் உள்ள மருதூர் அணைக்கட்டு.
இந்த அணைக்கட்டுக்கு தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு 70 ஆயிரம் கன அடி நீர் அணையை தாண்டிச் செல்கிறது. ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மருதூர் அணைக்கட்டின் மேலக்கால்வாய் மற்றும் கீழக்கால்வாய் அடைக்கப்பட்டு முழு தண்ணீரும் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
மருதூர் அணைக்கட்டில் அணைக்கட்டில் அதிக அளவிலான தண்ணீர் வருவதாலும் அணைக்கட்டு 4000 அடி நீளம் கொண்டதாலும் ஆற்றில் வரும் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்லும் காட்சி காண்போர் கண்களுக்கு விருந்தாக அமைகிறது.
மேலும் ஆபத்தை உணராமல் அணைக்கட்டு பகுதியில் கிராம மக்கள் வேடிக்கை பார்த்த வண்ணம் உள்ளனர்.
இன்று இரவுக்குள் அணைக்கட்டில் கூடுதலான தண்ணீர் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


