(12 – 12 – 2024 வியாழக்கிழமை) அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது . அதி தீவிர கன மழை (14 – 12 – 2024 சனிக்கிழமை) வரை நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றின் கரையோர உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும். பாதுகாப்பாக இருக்கவும் மாவட்ட நிர்வாகம் கேட்டு கொள்கிறார்கள். கனமழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
பொதுமக்கள் மழை நேரங்களில் ஈர கைகளினால் மின்சாரம் சம்பந்தப்பட்ட பொருட்களில்,ஸ்விட்ச்களில் கை வைக்க வேண்டாம்.
மழை பெய்யும் போது மரங்களின் அருகிலோ,பழைய வீடுகளில் அருகிலோ,மின் கம்பங்கள் அருகிலோ செல்வதை தவிர்க்கவும்.
மழை நேரங்களில் வாகனங்களில் செல்லக் கூடியவர்கள் சாலைகளில்* மிதமான வேகத்துடன் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் செல்லவும். ஏனென்றால் மழைக் காலங்களில் எந்த இடத்தில் சாலைகள் பழுதடைந்து (பள்ளம்) உள்ளது. என்று தெரியாது ஆகையால் மிகவும் கவனமுடன் செல்லவும் மழைக் காலங்களில் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
அவசர தேவைகளுக்கு மட்டும் வெளியே செல்லுங்கள்.
மருத்துவ சம்பந்தப்பட்ட அவசர உதவிகளுக்கு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் களை தொடர்பு கொள்ளவும்.
மழை நேரங்களில் அறுந்து விழுந்த மின் கம்பிகளை கண்டால் மற்றும் மின்சாரம் சம்பந்தப்பட்ட எந்த விதமான பிரச்சனைகளுக்கு உடனடியாக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தொடர்பு கொள்ளவும் – 94987 94987
மழை நேரங்களில் வீடுகள் சேதம் அடைந்தாலோ மரங்கள் விழுந்தாலோ உடனடியாக அருகில் உள்ள தமிழ்நாடு
தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகள் தகவல் தெரிவிக்கவும்- 101 – 0462 – 2572099, – 73050 95 952, – நெல்லை மாவட்டம்.
மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையம் – 1077, 0462-2501012 நெல்லை மாவட்டம்.
மருத்துவம் சம்பந்தமான சந்தேகங்களுக்கு – 104
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி மையம் – 0462 – 2573267
மாவட்ட காவல்துறை – 0462 256 2500, 99527 40740
மாநகர காவல் துறை – 0462 256 2651,89399 48100
உங்கள் வீடுகளுக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை வாங்கிக் வைத்துக் கொள்ளவும் .மேலும் மெழுகுவர்த்தி, தீப்பெட்டிகள் மற்றும்,எமர்ஜென்சி லைட் , செல்போன் இதர உபகரணங்கள் சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளவும்.
அதிக கன மழை பெய்து கொண்டிருப்பதால் ஆறுகள், குளங்கள், ஏரிகள் , கால்வாய்கள், கடல், அருவிகள், ஆகியவற்றுக்கு பொதுமக்கள் செல்வதை தவிர்க்கவும்.
மழைக் காலங்களில் குளிரூட்டப்பட்ட பானங்கள், குளிர்ச்சியான உணவுகளை தவிர்த்துக் கொள்ளவும்.
மழைக்காலங்களில் குடிநீரை கொதிக்க (சுட) வைத்து (வெந்நீராக)
குடிக்கவும்.
வீட்டில் இருக்கக்கூடிய சிறு குழந்தைகள் மற்றும் பெரியவர்களை மழைக் காலங்களில் தனியாக எங்கும் வெளியே அனுப்ப வேண்டாம்.
நீர் நிலைகளில் நின்று புகைப்படம் எடுப்பதை தவிர்க்கவும்.
மழைக்காலங்களில் வரக்கூடிய காய்ச்சல், இருமல் ,சளி,உடல் சோர்வு மற்றும் இதர நோய் ஆகியவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அலட்சியப்படுத்தாமல் அருகில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனைகளில் அல்லது தனியார் மருத்துவமனைகளில் உடனடியாக சென்று பரிசோதனை செய்து கொள்ளவும்.
என்றும் மக்கள் நலனில்:
திரு.T.P.M.மைதீன்கான் முன்னாள் அமைச்சர் மற்றும் மாவட்ட கழக பொறுப்பாளர் திருநெல்வேலி மத்திய மாவட்டம்
மு.அப்துல் வஹாப்.MLA பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதி
இவர்களுடன்…
பாளை.K.R.புஹாரி
ஒருங்கிணைப்பாளர் தகவல் தொழில்நுட்ப அணி பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதி திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக


