திருநெல்வேலி மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சி மலையிலும் தொடர்ந்து வரலாறு காணாத கனமழை பொழிந்து வருவதால் தாமிரபரணியில் இன்று (13.12.2024) 60000 முதல் 70000 கன அடி தண்ணீர் திறப்பதற்கு வாய்ப்பு உள்ளது. தாமிரபரணி ஆற்றின் அருகே உள்ள மக்களுக்கு எச்சரிக்கை செய்யவும். தங்கள் பகுதிகளுக்கு உட்பட்ட தாமிரபரணிக்கு அருகே வசிக்கும் மக்களுக்கு உடன் தகவல் தெரிவித்து துரித நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
இன்று (13.12.2024) மதியம் 12:00 மணிக்கு மேல் தாமிரபரணியில் மிக மிக அதிக அளவு தண்ணீர் வர உள்ளது.
அனைத்து பணியாளர்களும் துரிதமாக செயல்பட கேட்டுக்கொள்கிறேன்.
பொதுமக்களுக்கு தகவலை உடனடியாக தெரிவிக்க அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கேட்டுக்கொள்கிறேன்.


