தூத்துக்குடியில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக சோனியா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக தனசேகர் நகரில் அமைந்துள்ள ஶ்ரீ லக்ஷ்மி மஹாலில் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு மாநில ஐஎன்டியூசி பொதுச் செயலாளர் கே.பெருமாள்சாமி தலைமையில் கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி தூத்துக்குடி மாவட்ட தலைவர் டி.ஜெயக்கொடி வர்த்தக காங்கிரஸ், தெற்கு மாவட்ட தலைவர் டி.டேவிட் பிரபாகரன், வடக்கு மண்டல தலைவர் டி.சேகர், கிழக்கு மண்டல தலைவர் ஐசன் சில்வா, தெற்கு மண்டல தலைவர் எஸ்.தங்கராஜ், டிசிடியூ மாநில செயலாளர் ஆடிட்டர் சிவராஜ் மோகன், பழங்குடியினர் பிரிவு மாநில செயலாளர் முனியசாமி,வார்டு தலைவர் நேரு, மாநகரச் செயலாளர் கோபால், மீனவர் அணி மிக்கேல் குரூஸ், எஸ்சி/எஸ்டி பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாராம், மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபு, மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் பிரதீப் தினகரன், சேகர், வழக்கறிஞர் ஸ்டான்லி, பிரேம்நாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


