தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் உள்ள முள்செடிகள் மற்றும் புதர்களை அகற்றும் பணி கடந்த ஜுலை 6 ந்தேதி கலியாவூர் மருதூர் அணையில் துவங்கியது. இந்த பணியை கனிமொழி எம்.பி துவக்கி வைத்தார்கள். எக்ஸ்னோரோ நி-றுவனத்தின் மூலம் வாடகை இல்லா இயந்திரம் மூலம் மற்றும் தனியார் அரசு உதவுயுடன் நதியை சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. மருதூர் அணை, செந்நெல்பட்டி, ஆழிகுடி, முத்தாலங்குறிச்சி, ஆறாம்பண்ணை ஆகிய பகுதிகளில் இந்த பணி நடந்து முடிந்துள்ளது. தற்போது இந்த பணி கருங்குளத்தில் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் அவர்களின் ஏற்பாடில் இந்த பணி நடைபெறுகிது. இந்த பணியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, மருதூர் அணை மேற்பார்வையாளர் கல்யாணி, ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் சேக்அப்துல் காதர், கருங்குளம் பஞ்சாயத்து தலைவர் உதய சங்கர், சுயம்பு, கருங்குளம் அரசுமேல்நிலைப்பள்ளி கிளார்க் முருகன், செய்துங்கநல்லூர் வேம்புத்துரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.


