தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரி ரயில்நிலையத்திற்கு கீழ்புறம் செம்பூர் செல்லும் வழியில் ரயில்வே தண்டவாளம் பக்கவாட்டில் துர்நாற்றம் வீசுவது அறிந்து ஆழ்வார்திருநகரி ரயில்வே பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் பார்வையிட்டனர். அப்போது ரயில்வே தண்டவாளம் பக்கவாட்டில் முற்புதரில் அழுகிய நிலையில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடப்பதை கண்டு பிடித்தனர்.
இதுகுறித்து உடனே ரயில்வே போலிசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே ரயில்வே போலிஸ் இன்ஸ்பெக்டர் அருள்ஜெயபால், சப்-இன்ஸ்பெக்டர் ஜீலியட் ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். காவி வேஷ்டி, பச்சை நிற டீசர்ட் அணிந்து அழுகிய நிலையில் கிடந்த சடலத்தினை உடற்கூறு ஆய்வு செய்வது குறித்து போலிசார் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் ரயில்வே தண்டவாளம் அருகே அழுகும் வரை ஒருவரின் உடல் கிடந்ததால் அவர் ரயிலில் இருந்து தவறி விழுந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா என போலிசார் பல்வேறு கோணத்தில் விசாரனை நடத்தி வருகின்றனர்.


