தூத்துக்குடி மாவட்டம் தெற்குகாரசேரி சிவன் கோயிலை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும் என இந்து ஆலய பாதுகாப்பு குழு இணை இணையரிடம் சிவ பக்தர்கள் மனுகொடுத்துள்ளனர்.
தெற்கு காரசேரி சிவன் கோயில் மிகவும் பழமையான கோயில். ஒரு காலத்தில் தேர் ஓடிய கோயிலாக இவ்வாலயம் அமைந்திருந்துள்ளது. இக்கோயிலுக்கும் ஸ்ரீவைகுண்டம் சிவன் கோயிலுக்கும் சுரங்கபாதை அமைந்திருந்தது என்றும் குலசேர மன்னன் குலசேகரபட்டினத்தில் இருந்து சேர நாடு வரை கட்டிய ஆலயங்களில் இதுவும் ஒன்று என போற்றப்படுகிறது.
இந்த கோயிலில் பல ஆண்டுகள் திருப்பணி நடந்தும், அதன் பின் 100 ஆண்டு கடந்து கடந்த 5.02.2018 அன்று கும்பாபிசேகம் நடந்தது. இதில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டம் உள்பட பல இடங்களிலில் இருந்து சிவனடியார்கள் கலந்து கொண்டனர். கும்பாபிசேகம் முடிந்த கையோடு தேரை சீரமைத்து தேரோடும் வீதியாக இக்கோயிலை உருவாக்க வேண்டும் என பக்தர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இதற்கிடையில் கோயிலை சுற்றி கோயில் இடத்தினை ஆக்கிரமிப்பு செய்து சிலர் வீடு கட்டி வருகின்றனர். எனவே இந்த வீடுகளை அகற்ற வேண்டும் என்று நெல்லை மாவட்ட இந்து ஆலய பாதுகாப்புகுழு செயலாளர் சிவ.ராமகுட்டி, கோயில் திருப்பணி கமிட்டி தலைவர் உச்சிமகாளி ஆகியோர் நெல்லை இந்து சமய அறநிலையத்றை இணை ஆணையரிடம் மனு கொடுத்துள்ளனர்.
கோயிலை இடத்தினை ஆக்கிரமித்த தனியார் வீடுகட்டும் இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


