தூத்துக்குடியில் ஹெச்.எம்.எஸ்.உழைப்பாளர் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட்போட்டி நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு ஹெச்.எம்.எஸ். உழைப்பாளர் சங்கம் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் தனியார் ஹோட்டலில் மாவட்ட தலைவர் டாக்டர் ராஜ லட்சுமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தேசிய தொழிலாளர் கல்வி வளர்ச்சி வாரியம் ஆலோசனை குழு உறுப்பினர் டாக்டர் ராஜ்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய கிளை அலுவலகம் திறக்க வேண்டும். வருகிற டிசம்பர் மாத இறுதிக்குள் அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். சங்கம் சார்பில் டிசம்பர் மாதம் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடத்துவது, தமிழ்நாடு ஹச்எம்எஸ் உழைப்பாளர் சங்கம் 3 ஆண்டுகள் நிறைவடைந்தது ஒட்டி 2வது மாவட்ட மாநாடு 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தூத்துக்குடியில் நடத்துவது என 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் ராதா, மாவட்ட பொருளாளர் பெஸ்சி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நிர்மல், மாவட்ட இணை செயலாளர் ஜாகிர் உசேன், மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் மரிய திவ்யா, சந்திரமணி, விஜி நிமல், காமாட்சி சரோஜா கோவில்பட்டி தொகுதி செயலாளர் மணிகண்டன், ஓட்டப்பிடாரம் ராஜேஷ், விளாத்திகுளம் வேல் புஷ்பம், திருச்செந்தூர் பெமீனா, செயலாளர் முத்துராஜ், ரயில் நிலைய ஆட்டோ சங்கதுணைச் செயலாளர் மில்டன் உள்பட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


