தூத்துக்குடி மாவட்டத்தில் தெற்கு கல்மேடு உட்பட 20 ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், தெற்கு கல்மேடு கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் தொடர்பான சமூகத்தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு சமூக தணிக்கை சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் 23 கட்டங்களாக சமூக தணிக்கை நடைபெற்று வருகிறது.இதில் 10வது கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியத்தில் 20 கிராம ஊராட்சிகளில் நவ – 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்,பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் கிராம வள பயிற்றுநர்களால் சமூகத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான சமூகத் தணிக்கை அறிக்கை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம்.ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், தெற்குகல்மேடு கிராம ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு கூட்டத் தலைவர் சுயம்பு தலைமை வகித்தார்.ஊராட்சி மன்ற தலைவர் முத்து மணி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் அசோக்குமார்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி செயலர் பொன்வேல் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தினை ஓட்டப்பிடாரம் சமூகத் தணிக்கை வட்டார வள பயிற்றுனர் முத்து முருகன் வழிநடத்தி சமூக தணிக்கை அறிக்கை தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடல் செய்தார்.கூட்டத்தில் சமூகத் தணிக்கை அறிக்கை குறித்த 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் மக்கள் நலப்பணியாளர் சின்னதம்பி,கிராம வள பயிற்றுநர்கள் முத்து முனிஸ்வரி,ஆதிலட்சுமி,ராமலட்சுமி,திருமணிக்கரசி,முத்துமணி,மீனாட்சி,பணித்தள பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பணித்தள பொறுப்பாளர் சண்முகசுந்தரி நன்றி கூறினார்.
இதேபோல் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் கொல்லங்கிணறு, கொடியங்குளம் உள்பட தூத்துக்குடி மாவட்டத்தில் 20 ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.


