தூத்துக்குடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்றம் சார்பில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது
தூத்துக்குடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்றம் சார்பில் குழந்தைகள் தினவிழா நலம் தரும் விநாயகர் ஆலயம் அருகில் என்எல்சி இந்தியா லிமிடெட் முன்னாள் பொது மேலாளர் ராஜதுரை தலைமையில் நடைபெற்றது. வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்ற செயலாளா் காமாட்சி முருகன் வரவேற்புரையாற்றினார்.
அறம் சார் அறக்கட்டளை செயலாளர் ஜெயபால் ஆலிவர், மைதிலி செல்வராஜ், துணைத் தலைவர் பத்மலதா, பொருளாளர் சாந்தி, ஆலயத் தலைவர் நவநீதகிரிஷ்ணன், துரைச்சாமிபுரம் இந்து நாடார் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியா் மங்கத்தாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வழக்கறிஞா் விஜயசுந்தர், ஓய்வு பெற்ற ஆசிரியை மாரியம்மாள் குருபிரசாத், முருகன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினர். தொடா்ந்து வெற்றி பெற்ற குழந்தைக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிறைவாக ஆசிரியை தேவி நன்றி கூறினார்.


