தெற்கு கள்ளிகுளம் திருநெல்வேலி தட்சண மாற நாடார் சங்க கல்லூரி சார்பில் தமிழத்துறை சுயநிதிபிரிவு மற்றும் கிராமியக் கலை இலக்கிய மன்றம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான ஒருநாள் கருத்தரங்கம் நடந்தது. இதில் கொற்கை படைப்பாளர்களின் படைப்புகளை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, காமராஜர் சிலைக்கு சிறப்பு விருந்தினர் மாலை அணிவித்தார். அதன் பின் நிகழ்ச்சியில் மாணவிகளின் வரவேற்பு நடனம் நடந்தது. தொடர்ந்து குத்து விளக்கு ஏற்றப்பட்டது. கல்லூரி செயலர் வி.பி. ராமநாதன் தலைமை வகித்தார். முதல்வர் முனைவர் மேஜர் ராஜன் முதல்வர் உரையாற்றினார். தமிழ்த்துறை சுயநிதிபிரிவு ஒருங்கிணைப்பாளர் கிரிஜா வரவேற்று பேசினார். தென்மாமவட் சிறுதெய்வ வழிபாடுகளும் சடங்குகளும் என்ற தலைப்பில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு சிறப்பு உரையாற்றினார். கொற்கை படைப்பாளர் அறிமுக எழுத்தாளர் காமராசு செல்வன் தான் எழுதிய விடிலிக்காடு என்ற நாவல் உருவாக்கம் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளின் கலந்துரையாடல் நடந்தது. தொடர்ந்து அபிஷ் விக்னேஷ் இயக்கிய கள்ளவாண்டன் ஆவணபடம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. கிராமியக் கலை இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு. முருகவேல் நன்றி கூறினார்.


