1854 – “எஸ்.எஸ். ஆர்க்டிக்” நீராவிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் மூழ்கியதில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
1893 – சிகாகோவில் இடம்பெற்ற உலகச் சமயங்களின் பாராளுமன்ற மாநாடு முடிவடைந்தது.
1905 – அல்பேர்ட் ஐன்ஸ்டைன் முதற் தடவையாக E=mc² என்ற சமன்பாட்டை அறிமுகப்படுத்தினார்.
1916 – எதியோப்பியாவில் இடம்பெற்ற அரண்மனைப் புரட்சியை அடுத்து இயாசு மன்னர் பதவியை இழந்தான்.
1928 – ஐக்கிய அமெரிக்கா சீனக் குடியரசை அங்கீகரித்தது.
1937 – கடைசி பாலிப் புலி கொல்லப்பட்டது.
1938 – ஆர்.எம்.எசு. குயின் எலிசபெத் பயணிகள் கப்பல் கிளாஸ்கோவில் வெள்ளோட்டம் விடப்படட்து.
1939 – இரண்டாம் உலகப் போர்: வார்சா ஜெர்மனியிடம் சரணடைந்தது.
1940 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி ஆகியன முத்தரப்பு உடன்பாட்டில் பேர்லின் நகரில் கையெழுத்திட்டன.
1944 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் கெசெல் நகர் மீது கூட்டுப்படைகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் அமெரிக்கப் படைகளுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்திய தாக்குதல் ஆகும்.
1956 – அமெரிக்க வான்படைக் கப்டன் மில்பேர்ன் ஆப்ட் மக் 3 ஐத் தாண்டிய முதல் நபர் என்ற பெயரைப் பெற்றார். சிறிது நேரத்தின் பின்னர் விமானம் கட்டுக்கடங்காமல் வீழ்ந்து நொறுங்கியதில் அவர் ஆப்ட் கொல்லப்பட்டார்.
1959 – ஜப்பானின், ஹொன்ஷூ நகரில் இடம்பெற்ற புயலில் 5000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1961 – சியேரா லியோன் ஐநாவில் இணைந்தது.
1964 – ஜான் எஃப். கென்னடியை லீ ஹாவி ஒசுவால்ட் என்பவன் வேறு எவரினதும் தூண்டுதல் இன்றிக் கொலை செய்ததாக வாரன் ஆணையம் அறிக்கை வெளியிட்டது.
1977 – ஒண்டாரியோவில் 300 மீட்டர் உயர தொலைக்காட்சிக் கோபுரம் ஒன்றில் சிறு விமானம் ஒன்று மோதியதில் அதில் பயணம் செய்த அனைவரும் கொல்லப்பட்டனர். கோபுரம் இடிந்து வீழ்ந்தது.
1983 – இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பில் சிறை உடைப்பில் பல தமிழ் அரசியல் கைதிகள் தப்பி ஓடினர்.
1983 – ரிச்சார்ட் ஸ்டோல்மன் க்னூ செயற்றிட்டத்தைப் பகிரங்கமாக அறிவித்தார்.
1994 – மியான்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்க்க மக்களாட்சிக்கான தேசிய அமைப்பை ஓங் சான் சூ கீ உருவாக்கினார்.
1993 – அப்காசியாவில் சுகுமியில் ஜார்ஜியப் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்.
1996 – ஆப்கானிஸ்தானில் முகமது ஓமார் தலைமையிலான தலிபான் தீவிரவாதிகள் காபூல் நகரைக் கைப்பற்றி அதிபர் புரானுடீன் ரபானியை ஆட்சியிலிருந்து விரட்டினர். முன்னாள் அதிபர் முகமது நஜிபுல்லா காபூல் நகர மின்சாரக் கம்பத்தில் மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார்.
1997 – செவ்வாய் தளவுளவியுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.
1998 – கிளிநொச்சி நகரம் விடுதலைப் புலிகளினால் ஓயாத அலைகள் இரண்டு நடவடிக்கை மூலம் வெற்றி கொள்ளப்பட்டது.
1998 – கூகிள் தேடுபொறி ஆரம்பிக்கப்பட்டது.
2002 – கிழக்குத் தீமோர் ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்தது.


