தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க , 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன் பின் கழிவு நீர் கலப்பதை தடுக்க ஏன் எந்த நடவடிக்கை யும் எடுக்க வில்லை. கழிவு நீர் கலப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ,பொது பணி துறை, நெல்லை மாநாகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இல்லை எனில், தொடர்புடைய அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என உயர்நீதி மன்றம் மதுரை அமர்வு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 30 ம் தேதி ஒத்திவைத்து உத்தர விட்டுள்ளனர்.
தாமிரபரணி ஆற்றில் பல ஆண்டுகளாக கழிவு நீர் கலக்கிறதே,இதை தடுக்க ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கு மன சாட்சியே இல்லையா?- என நீதிபதிகள் கேள்வி தொடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,
திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா புஷ்கரம் விழா நடைபெறும். 2018 அக்டோபரில் மகாபுஷ்கரம் நடந்தது. தாமிரபரணி ஆற்றின் கரையில் பழமையான மண்டபங்கள், படித்துறைகள் ஏராளமாக உள்ளன. இவற்றை பழமை மாறாமல் புதுப்பிக்குமாறும், ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவும், ஆற்றை தூய்மையாக பராமரிக்குமாறும் உத்தரவிட வேண்டும். என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் முன் 25.09.2024 விசாரணைக்கு வந்தது.
நெல்லை நீர் வளத்துறை தலைமை பொறியாளர் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அப்போது அரசு தரப்பில், பல ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகள், கழிவு நீரை தாமிரபரணியில் கல க்கிறது. எந்த பின் விளைவுகளையும் எதிர் பார்க்காமல் கழிவு நீரை கலந் து வருகின்றனர். இந்த பிரச்சனை தவிர்க்கப்படும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளோம். நிதி ஒதுக்கீடு கிடைத்தவுடன் ஒவ்வொரு கட்டமாக. கழிவு நீர் கலக்காமல் நடவடிக்கை எடுக்க உள்ளோம்.
தாமிரபரணி ஆற்றில் நெல்லை மாநாகராட்சி தான் அதிக அளவில் கழிவு நீர் கலக்கிறது. 6 மாதத்தில் சுத்திகரிப்பு நிலையங்களை செயல்படுத்தி விடுவோம்.உயர் மட்ட குழு அமைத்து நடவடிக்கை எடுக்க உள்ளோம் என தெரிவித்தார்.
இதை தொடர்ந்து நீதிபதிகள், தாமிரபரணி ஆற்றில் உள்ளாட்சி அமைப்புகள் பல ஆண்டுகளாக கழிவு நீர் கலக்கிறதே. இதை தடுக்க ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கு மன சாட்சியே இல்லையா. கழிவு நீர் கலக்கும் புகைபடங்களை பார்க்கும் போது மனது வலிக்கிறது.
தாமிரபரணியில் ஆயிரம் லிட்டர் தண்ணீர் 1.50 ரூபாய்க் கு தனியார் நிறுவனங்கள் அரசுக்கு கட்டணம் செலுத்தி எடுக்கின்றனர்.
ஆனால், தாமிரபரணி நீரை அனுமதி பெற்று 7 தொழிற்சாலைகள் எடுத்ததில் மட்டும் , ரூ. 260 கோடி நிலுவை தொகை அரசுக்கு செலுத்த வேண்டியதுள்ளது. இது போல் நூற்றுக் கணக்கான தொழிற்சாலைகள் நீர் வரி செலுத்த வேண்டியது நிலுவையில் உள்ளதா? என்பது குறித்து ம் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
கழிவு நீர் கலப்பதை தடுக்க , கடந்த 2018 ல் தாக்க ல் செய்த வழக்கு, 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன் பின் கழிவு நீர் கலப்பதை தடுக்க ஏன் எந்த நடவடிக்கை யும் எடுக்க வில்லை . எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, பொது பணி துறை, நெல்லை மாநாகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இல்லை எனில், தொடர்புடைய அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும். என எச்சரித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை செப்டம்பர் 30 ம் தேதி ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


