தூத்துக்குடியில் சீரான குடிநீர் விநியோகம் தொடர்பாக, மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகருக்கு குடிநீர் வழங்கக்கூடிய வல்லநாடு நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ள பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளதால் முறையாக வழங்கப்பட்டு வந்த குடிநீரானது ஒரு நாள் தாமதமாக வரும் என்பதையும் மாநகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம், ராஜாஜி பூங்கா மற்றும் லெவஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல் நிலை நீர் தேக்க தொட்டிகளையும் மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ராஜா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.


