தூத்துக்குடியில் அரபுக்கல்லூரி மாணவன் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி தாளமுத்து நகர் கோவில் பிள்ளை விளையைச் சேர்ந்தவர் முகமது முஸ்தபா. இவரது மகன் முகமது இர்ஷாத் (15) காயல்பட்டினம் அரபிக் கல்லூரியில் ஓதும் படிப்பு படித்து வருகிறார். இவர் ரமலான் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள தனது வீட்டுக்கு வந்திருந்தார்.
கடந்த மாதம் 18ஆம் தேதி இவரது தந்தையுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்பு வீடு திரும்பவில்லை. அவர் எங்கு சென்றார் என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தந்தை முகமது முஸ்தபா தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஆதாம் அலி வழக்கு பதிவு செய்து மாணவனை தேடி வருகிறார்.


