தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியில் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் பராமரிப்பு பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி 41வது வார்டுக்கு உட்பட்ட சண்முகபுரம் பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக தகவல் வந்ததையொட்டி அதற்கான காரணங்கள் என்ன என கண்டறியப்பட்டு மார்க்கெட் அருகில் குடிதண்ணீர் வரும் குழாயில் ஏற்பட்ட பழுதின் காரணமாக வந்ததையடுத்து உடனடியாக பணியாளர்கள் மூலம் மேற்கொண்ட பணிகளை சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நோில் ஆய்வு செய்தார்.
இதே போல் 49வது வார்டுக்குட்பட்ட ராஜபாண்டி நகர் எம்ஜிஆர் நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் கோாிக்கையைஏற்று தேவையற்ற இடங்களில்இருந்த கருவேல மரங்கள் முள்செடிகளை ஜேசிபி மூலம் தனது சொந்த செலவில் அகற்றும் பணியையும் அமைச்சர் கீதாஜீவன் மேற்கொண்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர்கள் வைதேகி, பேபிஏஞ்சலின், வட்டச்செயலாளர்கள் பொன்ராஜ், முக்கையா, வட்டப்பிரதிநிதி பாஸ்கர், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.


