1837 – கனடாவின் கியூபெக் மாநிலத்தில் பிரித்தானியாவின் ஆட்சிக்கெதிராக நாட்டுப்பற்றாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள்.
1865 – அமெரிக்காவின் அலபாமாவில் “மொபைல்” என்ற இடத்தில் தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடிப்பில் 300 பேர் உயிரிழந்தனர்.
1895 – புதின ஆசிரியர் ஆஸ்கார் வைல்டு ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்தாகக் குற்றம் சாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார்.
1914 – அயர்லாந்துக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்டமூலம் ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1926 – பாரிசில் அமைந்திருந்த நாடுகடந்த உக்ரைனிய மக்கள் குடியரசின் தலைவர் சைமன் பெத்லியூரா என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1938 – எசுப்பானிய உள்நாட்டுப் போர்: அலிசாண்டே நகரின் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் 313 பேர் கொல்லப்பட்டனர்.
1940 – இரண்டாம் உலகப் போர்: செருமனி போலோன் துறைமுகத்தைக் கைப்பற்றியது.
1946 – முதலாம் அப்துல்லா ஜோர்தான் அமீராக அந்நாட்டு நாடாளுமன்றத்தினால் நியமிக்கப்பட்டார்.
1953 – அணுகுண்டு சோதனை: நெவாடாவில் ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவதும் கடைசியுமான அணு ஆற்றலினாலான பீரங்கியைச் சோதித்தது.
1955 – ஐக்கிய அமெரிக்காவில் கேன்சஸ் மாநிலத்தில் “உடால்” என்ற சிறு நகரை இரவு நேர சுழல் காற்று தாக்கியதில் 80 பேர் உயிரிழந்தனர்.
1961 – அப்பல்லோ திட்டம்: பத்தாண்டுகளின் இறுதிக்குள் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் ஐக்கிய அமெரிக்காவின் திட்டத்தை அரசுத்தலைவர் ஜான் எஃப். கென்னடி அமெரிக்கக் காங்கிரசில் அறிவித்தார்.
1963 – அடிஸ் அபாபாவில் ஆபிரிக்க ஒன்றியம் உருவானது.
1977 – ஸ்டார் வோர்ஸ் திரைப்படம் வெளிவந்தது.
1977 – வில்லியம் சேக்சுபியரின் இலக்கியங்கள் மீதான தடையை சீனா நீக்கியது. 1966 இல் ஆரம்பமான சீனப் பண்பாட்டுப் புரட்சி முடிவுக்கு வந்தது.
1979 – ஐக்கிய அமெரிக்காவின் டிசி-10 விமானம் ஒன்று ஓகேர் பன்னாட்டு வானூர்தி நிலையத்துக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்த அனைத்து 271 பேரும் தரையில் இருவரும் உயிரிழந்தனர்.
1981 – ரியாத் நகரில் பகுரைன், குவைத், ஓமான், கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கிடையேயான வளைகுடா கூட்டுறவுப் பேரவை உருவானது.
1982 – போக்லாந்து போரில் கவெண்ட்ரி என்ற ஆங்கிலேயக் கப்பல் மூழ்கியது.
1985 – வங்காள தேசத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 10,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1997 – சியேரா லியோனியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் அகமது கப்பா பதவியில் இருந்து ஆகற்றப்பட்டார்.
2000 – லெபனானில் 22 ஆண்டுகளாக நிலை கொண்டிருந்த இசுரேல் இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறினர்.
2002 – சீன விமானம் ஒன்று தாய்வானில் நடுவானில் வெடித்துச் சிதறியதில் 225 பேர் உயிரிழந்தனர்.
2002 – மொசாம்பிக்கில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 197 பேர் உயிரிழந்தனர்.
2008 – நாசாவின் பீனிக்சு விண்ணூர்தி செவ்வாயில் தரையிறங்கியது.
2009 – வட கொரியா தனது இரண்டாவது அணுகுண்டு சோதனையை நிகழ்த்தியது.
2012 – டிராகன் விண்கலம் அனைத்துலக விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.
2013 – இந்தியாவில் சத்தீசுகர் மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதிகள் மீது மாவோயிசப் போராளிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டனர், 32 பேர் காயமடைந்தனர்.
2013 – பாக்கித்தான், குச்ராத் நகரில் பாடசாலைப் பேருந்து ஒன்றில் குண்டு வெடித்ததில் 18 பேர் உயிரிழந்தனர்.


