தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை இணைந்து நடத்தும் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து நடைபெற்றது.
முகாமினை மருத்துவ அலுவலர் டாக்டர்.கிருஷ்ணவேணி தமிழ் செல்வி துவக்கி வைத்தார். சித்த மருத்துவ அலுவலர் டாக்டர்.செல்வகுமார், மாவட்ட சுகாதார அலுவலர் அவர்களின் தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்து குமார வெங்கடேசன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இம்முகாமில் 15 நபர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. 11 நபர்களுக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா நன்றி கூறினார்.
இம்முகாமில் சுகாதார ஆய்வாளர் சாஹிர், எக்ஸ்ரே நுட்பனர் கிருஷ்டி, சுகாதார பார்வையாளர் முத்துலட்சுமி, நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துனர் அய்யம்மாள், அரி பாலகிருஷ்ணன், டி.வி.எஸ்.சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளையின் சமுதாய வளர்ச்சி அலுவலர் பரமசிவம், கிராம வளர்ச்சி அலுவலர்கள் தனுஷ்கோடி, செல்வி, சுகாதார துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை ஆகியோர்கள் இணைந்து செய்திருந்தார்கள்.


