நெல்லை- தாழையூத்து வடக்குவாச்செல்வியம்மன் கோயில் வளாகத்தில் 60 வருடங்களுக்கு பிறகு சிலம்பம் கலைஞர்களுக்கு தகுதி பட்டையம் அளிக்கும் விழா நடந்தது.
சிலம்ப கலையிலும் ஆயுத பெருக்கத்திலும் பயிற்சி பெற்ற தொழில் நுட்ப கலை பல கற்று தேர்வான திருமலை சிலம்ப பள்ளியின் தலைமை மாணவர்களுக்கு பல பேர் முன்னிலையில் தகு தி பட்டை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பகுதியில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் நிறுவனர் கலை நன் மணி, சிலம்ப மகாகுரு , வர்ம கலை நிபுணர் சங்கரன் ஆசான் கலந்து கொண்டு தகுதியானவர்களுக்கு தகுதி பட்டையும், சான்றிதழும் வழங்கினார். முன்னதாக கலைஞர்கள் ஊர்வலமாக வடக்குவாச்செல்வியம்மன்கோயிலுக்கு அழைத்து செல்லபட்டனர். அங்கு சிறப்பு பூஜை நடந்தது. அதன் பின் ஆசிர்வதிக்கப்பட்ட உடைகளை தலைமை மாணவர்கள் பெற்றுக்கொண்டனர். அதன்பின் சங்கரன் ஆசான் மாணவர்களால் கௌரவப்படுத்தப்பட்டார். தொடர்ந்து மாணவர்களுக்கு பட்டையம் வழங்கப்பட்டது-. இந்த நிகழ்ச்சியில் வீரசங்கிலி முத்துகிருஷ்ணன், இசக்கி ஆசான், ராஜ் ஆசான், அப்துல் அஜீஸ் ஆசான், நித்தியானந்தம் ஆசான் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதில் தூத்துக்குடி மாவட்டம் தேனி மாவட்டம், வத்தலகுண்டு உள்பட பல இடங்களில் இருந்து கலைஞர்கள் கலந்துகொண்டனர். அதன் பின் விளையாட்டு வீரர்கள் தங்களது திறமைகளை காட்டினர். இதைக்காண பக்தர்கள் கூடினர்.


