1903 – கனடாவின் அல்பர்ட்டா மாவட்டத்தில் 30 மில். கன மீட்டர் நிலச்சரிவு ஏற்பட்டதில் 70 பேர் உயிரிழந்தனர்.
1910 – பிரித்தானியப் பொதுமக்களுக்கு வளங்களைப் பகிர்ந்தளிக்கும் திட்டத்துடனான வரவு செலவுத் திட்டத்தை ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் அங்கீகரித்தது.
1916 – முதலாம் உலகப் போர்: பிரித்தானியாவின் 6-வது இந்தியப் படைப் பிரிவு உதுமானியப் படைகளிடம் ஈராக்கின் கூட் என்ற இடத்தில் சரணடைந்தது.
1916 – ஆறு நாட்கள் சமரின் பின்னர் அயர்லாந்துக் கிளர்ச்சித் தலைவர்கள் பிரித்தானியப் படைகளிடம் டப்லின் நகரில் சரணடைந்தனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியில் நிலை கொண்டிருந்த நாட்சி செருமானிய இராணுவம் நேச அணிகளிடம் நிபந்தனையின்றி சரணடைந்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: நெதர்லாந்தின் பல பகுதிகளிலும் உணவுப்பொதிகளை விமானத்தில் இருந்து வீசும் நடவடிக்கையை ஐக்கிய இராச்சிய வான்படையினர் ஆரம்பித்தனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: இட்லர் இவா பிரான் என்ற தனது நீண்ட நாளைய காதலியை தனது பெர்லின் சுரங்க அறையில் வைத்துத் திருமணம் புரிந்தார். இருவரும் அடுத்த நாள் தற்கொலை புரிந்து கொண்டனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனியில் டாக்கவ் என்ற இடத்தில் இருந்த டேச்சு அரசியல் கைதிகள் முகாம் அமெரிக்கப் படைகளினால் விடுவிக்கப்பட்டது.
1946 – சப்பானின் முன்னாள் பிரதமர் இடெக்கி டோஜோ மற்றும் 28 முன்னாள் தலைவர்கள் போர்க் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டனர்.
1951 – சீன அரச மன்றத்துக்கான திபெத்தியப் பிரதிநிதிகள் பெய்ஜிங் நகரை வந்தடைந்து, திபெத்திய சுயாட்சிக்கும், சீன இறையாண்மைக்குமான 17-அம்சத் திட்டம் ஒன்றை வரைந்தனர்.
1953 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது முப்பரிமாணத் தொலைக்காட்சி சோதனை ஒளிபரப்பு காட்சிப்படுத்தப்பட்டது.
1967 – வியட்நாம் போர்: அமெரிக்க இராணுவத்தில் சேர மறுத்த காரணத்தினால், முகம்மது அலியின் குத்துச்சண்டைப் பதக்கங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டன.
1970 – வியட்நாம் போர்: அமெரிக்க மற்றும் தென் வியட்நாம் படைகள் வியட்கொங் போராளிகளைத் தேடி கம்போடியாவை முற்றுகையிட்டன.
1975 – வியட்நாம் போர்: அமெரிக்க குடிமக்கள் சாய்கோன் நகரில் இருந்து தமது குடிமக்களை வெளியேற்றும் பணியை அமெரிக்கா ஆரம்பித்தது. வியட்நாமில் அமெரிக்கப் பங்களிப்பு முடிவுக்கு வந்தது
1986 – லாஸ் ஏஞ்சலஸ் நகர பொது நூலகம் தீப்பிடித்ததில் 400,000 நூல்கள் அழிந்தன.
1991 – வங்காளதேசத்தில், சிட்டகொங்கில் இடம்பெற்ற 155 கிமீ/மணி வேக சூறாவளியில் 138,000 பேர் வரையில் உயிரிழந்தனர். 10 மில்லியன் பேர் வீடுகளை இழந்தனர்.
1991 – சியார்சியாவில் 7.0 ரிக்டர் அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 270 பேர் உயிரிழந்தனர்.
1995 – நவக்கிரி என்ற இடத்தில் இலங்கை இராணுவத்தினரின் அவ்ரோ விமானம் 50 படையினருடன் விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
1997 – 1993 வேதி ஆயுத உடன்படிக்கை அமுலுக்கு வந்தது. வேதி ஆயுதங்கள் தயாரிப்பு தடை செய்யப்பட்டது.
2005 – 29 ஆண்டு கால முற்றுகையின் பின்னர் லெபனானில் இருந்து சிரியா முற்றாக வெளியேறியது.
2007 – வான்புலிகளின் இரண்டு வான்கலங்கள் கொழும்புக்கு வடக்கே 3 மைல் தொலைவில் உள்ள கொலன்னாவை எண்ணெய்க் குதங்களையும் 10 மைல் தொலைவில் உள்ள கெரவலப்பிட்டி எண்ணெய் குதங்களையும் குண்டு வீசித் தாக்கின.
2011 – இலவரசர் வில்லியம், கேத்தரீன் ஆகியோரின் திருமணம் இலண்டன் வெசுட்மினிஸ்டர்] மடத்தில் நடைபெற்றது.


