இராஜா இரவி வர்மா 29 ஏப்ரல் 1848 – 2 அக்டோபர் 1906) நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப் பாணி ஓவியக்கலைக்குள் புகுத்தியவர். உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர்.
இராஜா இரவிவர்மா கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள கிளிமானூர் என்னும் ஊரில் 1848-ஆம் ஆண்டில் உமாம்பா–நீலகண்டன் தம்பதிகளுக்குப் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே சமஸ்கிருதம், மலையாளம் ஆகியவற்றுடன் ஓவியத்தையும் தம்முடைய உறவினர் இராஜா இராஜவர்மாவிடமிருந்து கற்றுக்கொண்டார்.
இராஜா இராஜவர்மா, இரவிவர்மாவுக்குத் தமக்கு ஓவியத்தில் தெரிந்தவற்றை யெல்லாம் கற்றுக்கொடுத்தார். திருவாங்கூர் மன்னர் ஆயில்யம் திருநாள் மகாராஜாவின் உதவியுடன் 1862 ஆம் ஆண்டில் திருவனந்தபுரம் அரண்மனையில் எண்ணெய் வண்ண ஓவியக்கலையை அரண்மனை ஓவியர் இராமசாமி நாயுடுவிடம் ஒன்பது ஆண்டுகள் பயின்றார். அவரிடம் ஓவியக்கலையை கற்க ஆரம்பித்தார். தைலவண்ண ஓவியங்களில் உள்ள நுணுக்கங்களை தஞ்சாவூர் அரண்மனை ஓவியரான அழகிரி நாயுடுவிடமும் அறிந்து கொண்டார். சுதேசிமுறையில் செய்யப்பட்டன. அவ்வேளையில் அரச குடும்பத்தைச் சேர்ந்ததொரு பெண்ணை மணந்துகொண்டார்.


