செய்துங்கநல்லூரில் மார்கஸிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திரிபுராவில் லெனின் சிலை அகற்றியும், உத்ரபிரதேசத்தில் அம்பேத்கார் சிலை, தமிழகத்தில் பெரியார் சிலைகளை உடைத்தும் அராஜகம் செய்த பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் கட்சியை கண்டித்து செய்துங்கநல்லூர் பஜாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய குழு உறுப்பினர் குணேஷ்வரி தலைமை தாங்கினார். ஆழ்வை ஒன்றிய செயலாளர் ரவிசந்திரன், தொழிற்சங்கத்தின் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மா£வட்டகுழு உறுப்பினர் பொன்ராஜ் சிறப்புரை ஆற்றினார். கருங்குளம் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மணி, கண்ணன், கொம்பையா, கிளை செயலாளர்கள் ஞானமுத்து, ராமசந்திரன் உள்பட பலர் பேசினர். முருகன், சின்னத்துரை, மாரியம்மாள், சுடலை, ராஜா, அப்துல்காதர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


