சென்னை – தூத்துக்குடி இடையே 4 நாட்களுக்கு பிறகு ரயில் போக்குவரத்து தொடங்கியது.
நேற்றிரவு சென்னையில் இருந்து புறப்பட்ட முத்துநகர் எக்ஸ்பிரஸ் காலை 6.15 மணியளவில் தூத்துக்குடி சென்றடைந்தது. சென்னை எழும்பூர்-தூத்துக்குடி செல்லக்கூடிய முத்துநகர் எக்ஸ்பிரஸ் வழக்கம் போல இயக்கப்பட்டது.
திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர் – எழும்பூர் விரைவு ரயில் திருநெல்வேலியில் இருந்து இரவு 9.35 மணிக்கு புறப்படும். திருச்செந்தூர் – பாலக்காடு செல்லும் ரயில் மதியம் 1.30 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும். எழும்பூர் – திருச்செந்தூர் செல்லும் ரயில் திருநெல்வேலியுடன் நிறுத்தப்பட்டு பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
பாலக்காடு-திருச்செந்தூர் செல்லும் விரைவு ரயில் திருநெல்வேலியில் பகுதியளவு ரத்து செய்யப்படும். ஸ்ரீ வைகுண்டம் செய்துங்கநல்லூர் ரயில்நிலைய தண்டவாள பனியால் 2 நாட்களுக்கு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை நெல்லை-திருச்செந்தூர் முன்பதிவில்ல சிறப்பு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நெல்லை-தூத்துக்குடி, திருச்செந்தூர்-நெல்லை முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. வாஞ்சிமணியாச்சி-திருச்செந்தூர் முப்பதிவில்ல ரயில் நெல்லை-திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.


