தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
பின்னர் மேயர் கூறுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழையின் தாக்கத்தைத் தொடர்ந்து கண்காணித்து, மக்களைப் பாதுகாத்திடுமாறு உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளான கருத்தபாலம், பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு, சின்னக் கோவில் முன்புள்ள பகுதிகள், ரயில்வே ஸ்டேஷன் அதனை சுற்றியுள்ள பகுதிகள், கலைஞர் நகராகிய பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளை ஆய்வு செய்து மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்துமாறு அதிகாரிகளுக்கும் துறை சார்ந்த அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.
ஆய்வின் போது மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தொ.நிர்மல்ராஜ், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் சென்றனர்.


