நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தில் வருகிற 25,26 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள வாக்காளர் சிறப்பு முகாம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
ஏரல் வட்டாட்சியர் கைலாச குமாரசாமி தலைமை வகித்தார். இதில் ஏரல் தேர்தல் துணை தாசில்தார் செல்வபூபதி, பள்ளி தலைமை ஆசிரியர் கென்னடி வேதராஜ் , வருவாய் ஆய்வாளர் மகாதேவன் , கிராம நிர்வாக அலுவலர் முத்துமாலை மற்றும் ஆசிரியப்பெருமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


