கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் காவல்துறை சார்பில் மாற்றத்தை தேடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கருங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பில் மாற்றத்தை தேடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் தலைமை வகித்தார். அப்போது பேசிய அவர் பள்ளி மாணவ மாணவிகள் இடையே ஜாதி மதம் பாகுபாடு காட்டக்கூடாது சகோதரத்துவத்துடனும், ஒற்றுமையுடனும் பழக வேண்டும் என்றும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும், சைபர் கிரைம் பற்றியும், மற்றும் எதிர் காலத்தில் நல்ல நிலையினை அடைய மாணவ மாணவிகள் தங்களது இலக்கினை அடைய நன்று படித்து வெற்றியடையுமாறும் மாணவ மாணவிகளை வாழ்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மநாபபிள்ளை, உதவி ஆய்வாளர் பெவின் செல்வ பிரிட்டோ மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை ஆசிரியர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.


