நாசரேத் பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலயத்தில் மிஷனெரிகளுக்கான பிரதிஷ்டை ஆராதனை நடந்தது.
தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் நாசரேத் அருகே உள்ள பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலய 125வது பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு விஷ்வவாணி நற்செய்திப்பணி இயக்கம் சார்பில் மிஷனெரிகளுக்கான பிரதிஷ்டை ஆராதனை நடந்தது. சேகரகுரு.டேனியல் ஆல்பர்ட் தலைமை வகித்தார்.ஓய்வு பெற்ற குருவானவர் செல்வராஜ் ஆரம்ப ஜெபம் செய்தார். விஷ்வவாணி இயக்குனர் இம்மானுவேல் ஞானராஜ் தேவ செய்தி கொடுத்தார். இந்த ஆராதனையில் மொத்தம் 8 பேருக்கு மிஷனெரிகளுக்கான பிரதிஷ்டை செய்யப்பட்டது..
இதில் திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் ஷம்மா அகஸ்டின், திலகர், சேகர கமிட்டி உறுப்பினர்கள் சீலன், கோயில்ராஜ், சாமுவேல், சபை ஊழியர் டென்சிங் மற்றும் சபை மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கனோன் ஆர்தர் மர்காஷிஸ் சபை மன்ற தலைவர் வெல்ற்றன் ஜோசப் தலைமையில் சேகரகுரு.டேனியல், விஷ்வவாணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானசிங், நாசரேத் வட்டார ஒருங்கிணைப்பாளர் காலேப்ராஜன், அபிவிருத்தி ஊழியர் ஜெனிஷ் மற்றும் பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலய சேகர கமிட்டி உறுப்பினர்கள், அசன கமிட்டி உறுப்பினர்கள், சபை மக்கள் செய்திருந்தனர்.


