ஸ்ரீவைகுண்டம் நவ. 21. ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் அரங்கம் அறக்கட்டளை ( டி. வி. எஸ் குழுமம்) சார்பாக வருடந்தோறும் திருக்குறுங்குடி யில் நடைபெறுகின்ற கைசிக புராண நாடகம் நடைபெற்றது. இயக்குனர, கலைமாமணி, திருமதி. அனிதா ரத்னம் ஆண்டுதோறும் கைசிக ஏகாதசி விரதமிருந்து தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்து திருக்குறுங்குடி அழகிய நம்பிராயன் மீது அதீத பக்தி கொண்ட நம்பாடுவான் கதையை குழுவினர் நாடகம் நடத்தினார். திருக்கோயில் நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் வரவேற்பு வழங்கினார். ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி கைசிக புராணம் பற்றி விளக்கம் அளித்தார். நிர்வாக அதிகாரி
ஸ்தலத்தார் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்தார். கலைஞர்கள் அனைவருக்கும் அர்ச்சகர்கள் ரமேஷ், வாசு, நாராயணன், ரீமான், சீனு மாலை அணிவித்து பிரசாதம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் டி. வி. எஸ் குழுமத்தின் துணைத் தலைவர் பொறியாளர் செல்வம், மண்டல இயக்குனர் முருகன், துணை பொறியாளர் ஸ்ரீ ராம், பொறியாளர் கார்த்தி களப் பணியாளர்கள் பாலாஜி பத்மநாபன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆய்வாளர் நம்பி நன்றி கூறினார்.


