தூத்துக்குடியில் தேசிய அஞ்சல் வார விழாவை முன்னிட்டு தபால் நிலையத்தை மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.
இந்திய அஞ்சல் துறையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் தேசிய அஞ்சல் வார விழா அனுசரிக்கப் படுகின்றது. இந்த ஆண்டும் அக்.09 முதல் 13ஆம் தேதி வரை தேசிய அஞ்சல் வார விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியருக்கான வினாடி வினா போட்டி, தபால் தலை கண்காட்சி போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், தூத்துக்குடி திருச்செந்தூர் ரோட்டில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தை மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா தலைமை தாங்கினார். இதில் சி.வ. அரசு மேல்நிலை பள்ளி, பாரத் ரத்னா காமராஜர் பள்ளி, சுப்பையா வித்தியாலயம் பெண் பள்ளி உட்பட மாணவ, மாணவிகள் அஞ்சல் நிலையத்தை பார்வையிட்டனர்.
அவர்களுக்கு அஞ்சல் நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் செயல்விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் தலைமை அஞ்சலக அதிகாரி ராஜா, உதவி கோட்ட கண்காணிப்பாளர்கள் ஹேமாவதி, வசந்தா சிந்துதேவி, அஞ்சல் ஆய்வாளர் சுப்பையா, உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்சிக்கான ஏற்பாடுகளை அஞ்சல்துறை சார்பில் வணிக நிர்வாக அலுவலர் பொ.பொன்ராம்குமார் செய்திருந்தார்.


