நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியம், புது வாழ்வு சங்கம் சார்பில் வண்ணான்குளம் பாசன வாய்க்கால் தூர்வாறும் பணி தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம், அம்மன்புரம் அருகில் உள்ள வண்ணான்குளம் பாசன வாய்க்கால் சுமார் 4 கி.மீ.தூரம் தூர்வாரும் பணி நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்துடன் இணைந்த புது வாழ்வு சங்கம் மூலம் நடைபெற்றது. இதன் மூலம் மணக்காடு, பள்ளத்தார், தளவாய்புரம், இராணிமகராஜபுரம், காந்திபுரம், வள்ளிமாநகரம், அடைக்கலாபுரம், ஆறுமுக புரம், புதூர், மத்தி மாநகர், பள்ளிபத்து,குடியிருப்புவிளை உள்பட 12 கிராமங்கள் பயன் பெறுகிறது. இதனால் மொத்தம் 250 ஏக்கர் பாசன பரப்பு பயன் பெறுகிறது.
முன்னதாக சமூக சேவை பொறுப்பாளர் மணத்தி எட் வின் ஆரம்ப ஜெபம் செய்தார். கிளமென்ட் எபனேசர் கொடி அசைத்து தூர்வாரும் பணியை துவக்கி வைத்தார். மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார், வண்ணான்குளம் தலைவர் உதயகுமார், துலுக்கன் குளம் தலைவர் தனசேகர் உட்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ. மோகன் சி. லாசரஸ் தலைமையில் பொதுமேலாளர் செல்வகுமார் முன்னிலையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.


