அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஏரல் காந்தி சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட என்சிசி கமெண்டிங் ஆபிஸர் பிரதோஷ் அவர்களின் உத்தரவுப்படி ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்கள் சார்பாக ஏரலில் உள்ள காந்தி சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தேசிய மாணவர் படை மாணவர்கள் 25 பேர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் திரு விகடன் ஏஜிஎஸ் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை அலுவலர் மாணிக்கம் கலந்து கொண்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்று இன்னுயிர் நீத்த தியாகிகள் தியாகங்களைப் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். அதைத்தொடர்ந்து தூத்துக்குடி தேசிய மாணவர் படை மாவட்டத்தின் சார்பில் தற்பொழுது தேசிய தூய்மை பணி நடைபெற்று வருவதால் ஏரலில் உள்ள திருவள்ளுவர் படிப்பகத்தில் திருவள்ளுவர் சிலையை சுத்தம் செய்து மலர்மாலை அணிவித்தனர். நாடு முழுவதும் அக்டோபர் 1ஆம் தேதி தூய்மை பணியும் அக்டோபர் இரண்டாம் தேதி தியாகிகளின் சிலைகளை தூய்மைப்படுத்தும் பணி ஏசி மாணவர்கள் படை சார்பாக தூத்துக்குடி மாவட்ட என்சிசி கமெண்டிங் அலுவலர்அவர்களின் உத்தரவுப்படி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.



