தூத்துக்குடி – பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி விரைவு ரயில் நவீன எல்ஹெச்பி பெட்டிகளாக மாற்றப்பட்டு இயக்கத் தொடங்கியுள்ளது.
பயணிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று, பாலருவி விரைவு ரயிலில் கூடுதல் மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டி ஒன்று புதிதாக இணைக்கப்பட்டு நேற்று முதல் செயல்பாட்டிற்கு வந்தது. இப் புதிய மாற்றத்தை வரவேற்கும் விதமாகத் தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் சார்பில் ரயில் எஞ்சின், பெயர்ப் பலகைகளுக்கு மாலை அணிவித்து, பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி ரயில் அனுப்பி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்க துணைத் தலைவர் எஸ்.அந்தோணி முத்துராஜா, செயலாளர் மா.பிரமநாயகம், பொருளாளர் வே.லட்சுமணன், நிர்வாகச் செயலாளர் J.A.N.ஆனந்தன், நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர்.ராஜா மோகன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
புதிதாக இணைக்கப்பட்ட மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டியில் முதன்முறையாகத் தூத்துக்குடியில் இருந்து 40 பயணிகள் பயணித்தனர். எல்ஹெச்பி பெட்டிகளாக மாற்றியமைத்த தென்னக ரயில்வே நிர்வாகத்திற்குத் தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கச் செயலாளர் மா.பிரமநாயகம் நன்றி தெரிவித்துள்ளார்.


