தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்டவர்களுக்காக இன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் தகுதியான மகளிர்களுக்கு நடப்பு மாதத்திற்கான உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் விண்ணப்பித்து விடுபட்டவர்களின் விண்ணப்பப் படிவங்களை சரிபார்க்கும் முகாம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தலைமையில் இன்று (19.09.2023) தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.


