தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, இந்து முன்னணி சார்பில் சிறுவர் சிறுமிககளுக்கான பாடல், பேச்சுப்போட்டி, மாறுவேட போட்டிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாநகர மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார் தலைமை வகித்தார். சேவா பாரதி வித்யா, பேச்சியம்மாள் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறுவர் சிறுமிகளுக்கு மத்திய பாகம் காவல் நிலைய சிறப்பு காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் பரிசுப் பொருட்களை வழங்கினார். விழாவில் இந்து முன்னணி ராகவேந்திரா, சிவலிங்கம், சிவக்குமார்,பலவேசம் மாரியப்பன், சிபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.


