ஒட்டப்பிடாரம் அருகே மழைநீர் வெள்ளத்தில் சிக்கி தவித்த குடும்பத்தினரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், ஒட்டப்பிடாரம் அருகே மேல தட்டப்பாறை பகுதியில் மழை காரணமாக சாலையின் செல்லும் மழை நீர் ஓடையை கடக்க முடியாமல் சிக்கிய தம்பதி மற்றும் அவர்களது 13வயது, 9வயது மகள்கள் தவித்து நின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் கோ. சுப்பையா தலைமையில் பணியாளர்கள் விரைந்து சென்று அவர்களை பத்திரமாக மீட்டனர்.


