தேசிய அளவிலான புகையிலை தடுப்பு சட்ட அமலாக்கப் பணிகள் மாநில மற்றும் மாவட்ட அளவில் அமல்படுத்திட விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்திலராஜ், இ.ஆ.ப. அவர்களின் உத்தரவின்படி, இன்று 12.09.2023 தூத்துக்குடி மாவட்டம். திருவைகுண்டம் வட்டாரத்திற்குட்பட்ட திருப்பணிசெட்டிகுளம் என்ற ஊராட்சி புகையிலை இல்லா கிராமமாக தேர்வு செய்யப்பட்டது.
புகையிலை இல்லாத கிராம ஊராட்சியாக தீர்மானிக்கும் சிறப்பு கிராம சபை கூட்டம் இன்று 12.09.2023 திருப்பணிசெட்டிகுளத்தில் ஊராட்சி மன்ற தலைவர் திரு.கயம்புலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா ஆரம்பமானது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தூத்துக்குடி துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.ச.பொற்செல்வன் அவர்கள், திருவைகுண்டம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.மாயவன் அவர்கள் மற்றும் சீனிவாச சேவை அறக்கட்டளை இயக்குநர் திரு.விஜயகுமார். வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.பாலசுப்பிரமணியன், ஏரல் வட்டார மருத்துவ அலுவலர் மரு.தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இக்கூட்டத்தில் துணை இயக்குநர் சுகாதார பணிகள் அவர்களின் நோமுக உதவியாளர் திரு.மதுரம் பிரைட்டன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். இக்கூட்டத்தில் திருவைகுண்டம் வட்டாரத்திற்குட்பட்ட திருப்பணி செட்டிகுளம் என்ற கிராமம் புகையிலை இல்லா கிராமமாக ஊராட்சி செயலாளர் திருமதி.இந்துமதி முன்மொழிய, ஏகமனதாக திமானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடாந்து புகையிலை இல்லா கிராமம் திருப்பணி செட்டிகுளம் என்ற அறிவிப்பு பலகை தூத்துக்குடி துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.ச.பொற்செல்வன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி திருப்பணிசெட்டிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் பொது மக்கள், வியாபாரிகள் ஆகியோரால் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார மருத்துவ அலுவலர், மாவட்ட மலேரியா அலுவலர், நலக் கல்வியாளர், மேற்பார்வையாளர், சுகாதார மாவட்ட ஆலோசகர், வட்டார சுகாதார ஆய்வாளர், சமுக ஆர்வலர், ஊராட்சி பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், ஊராட்சி மன்ற செயலாளர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், தன்னர்வலர்கள், வணிகர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் நிறைவாக திரு.அந்தோனி சாமி. நலக்கல்வியாளர் நன்றியுரை கூற நாட்டுப்பண்ணுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.


