திருவைகுண்டம் ஒன்றியம் தன்னூத்து கிராமத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க கிளை அமைப்பு கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் தலைவராக சங்கரேஸ்வரன் செயலாளராக சுப்பிரமணியன் பொருளாளராக செல்லம்மாள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 100 நாள் வேலைக்கான தமிழக அரசின் சுற்றறிக்கையின்படி நான்கு மணி நேரம் தான் பணியில் அமர்த்த வேண்டும் என்று கூறியுள்ளது அதற்கு மாறாக மாற்றுத்திறனாளிகளை காலை 9 மணியிலிருந்து மாலை நான்கு மணி வரை கட்டாயப்படுத்தி பணியில் அமர்த்த படுகிறார்கள் காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை வேலை நேரத்தை உறுதி செய்ய வேண்டும்
மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தை வறுமை கோடு பட்டியலில் சேர்க்க வேண்டும் தன்னூத்து கிராமத்தில் பால்வாடி அருகில் பாழடைந்த கிணறு மூடப்படாமலும் கிணற்றை சுற்றி சுவற்றில் பெரிதாக துவாரம் உள்ளது இதனால் பால்வாடிக்கு செல்லும் குழந்தைகள் கிணற்று அருகே விளையாட வருவதால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது உடனடியாக துவாரங்களை சரி செய்து பாழடைந்த கிணறை மேற்கு பகுதியை பாதுகாப்பாக மூட வேண்டும் தன்னூத்து கிராமத்தில் கீழத் தெருவில் மையப்பகுதியில் கழிவுநீர் செல்கிறது இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவ அதிக வாய்ப்பு உள்ளது உடனடியாக அந்தப் பகுதியில் காண் அமைத்து பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் கழிவுநீர் செல்ல ஏற்பாடு செய்து தர வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன கூட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் தோழர் கண்ணன் கலந்து கொண்டார்


