தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் வருகிற 8ம் தேதி கடல் சறுக்கு விளையாட்டு போட்டிகளை கனிமொழி எம்பி துவக்கி வைக்கிறார். இது தொடர்பாக திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கை: தி.மு.கழக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, சமூகநலன் (ம) மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான கீதா ஜீவன் ஆகியோர் வருகிற 8ஆம் தேதி வெள்ளிக்கிழமை கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சி நிரல் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி காலை 9 மணிக்கு தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் கடல் சறுக்கு விளையாட்டு போட்டிகளை துவக்கி வைக்கிறார்கள். காலை 11 மணிக்கு கோவில்பட்டி ஜி.வெங்கடசாமி நாயுடு கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். மாலை 4.30 மணிக்கு சோழபுரம், மாலை 5.15 மணிக்கு கன்னக்கட்டை, மாலை 6.00 புங்கவர்நத்தம், மாலை 6.45 மணிக்கு போடுப்பட்டி, இரவு 7.30மணிக்கு T.சண்முகபுரம் ஆகிய பகுதிகளில் மக்கள் களம் நிகழ்ச்சி மூலம் பொது மக்களின் குறை கேட்கிறார்கள்.


