நீர்வரத்து குறைந்ததால் மணிமுத்தாறு அருவியில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி தரப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


