ஸ்ரீவைகுண்டம் அருகே கொங்கராயகுறிச்சி புதுமனை தெருவை சேர்ந்தவர் வேம்பு குரு. இவரது மகன் மாரி செல்வம்(30). இவர் கருங்குளம் காங்கிரஸ் வட்டார செயலாளராக உள்ளார். இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கு இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் மாரி செல்வத்திற்கும் அவரது தம்பி மணிகண்டனுக்கும்(25) சொத்து குறித்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மணிகண்டனுக்கு உதவியாக தாயார் லெட்சுமி(59)யும் இருந்துள்ளார். இதில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. லெட்சுமியும் மணிகண்டனும் உருட்டுகட்டையால் மாரி செல்வத்தினை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த மாரி செல்வத்தினை சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவ மனையில் சேர்ந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று காலை 9 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் வழக்கு பதிவு செய்து லட்சுமி , மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்தார். இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


