தூத்துக்குடியில் ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தினை கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள உதவி செயற்பொறியாளர்களுக்கான அலுவலக கட்டிடத்தினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் முன்னிலையில் இன்று திறந்து வைத்தார்.
விழாவில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தம்பிரான் தோழன், மாநகராட்சி துணை மேயர் செ.ஜெனிட்டா, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கங்கா பரமேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


