தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள இரவு காவலாளி பணிக்கான நேர்முகத் தேர்வு காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது.
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள 2 உதவியாளர் பணி மற்றும் ஒரு இரவு காவலர் பணிக்கு விண்ணப்பித்தவர்களிடம் புதுக்கோட்டையில் உள்ள யூனியன் ஆணையாளர் அலுவலகத்தில் விண்ணப்பதாரர்களிடம் சேர்மன் வசுமதி அம்பா சங்கர், ஆணையாளர் ஹெலன் பெண்மணி, துணை சேர்மன் ஆஸ்கர் ஆகியோர் நேர்காணல் நடத்தினர்.
நேர் காணலுக்கு வந்தவர்களிடம் கல்வித் தகுதி, இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட சான்றி தழ்கள் சரிபார்ப்பு நடந்தது. அலுவலக உதவியாளர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால்போது மானது ஆனால் என்ஜினீயரிங் பட்டதாரிகள், இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் என 2 காலி பணியிடங்களுக்கு 656 பேர் நேர்காணக்கு வந்திருந்ததால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. நேர்காணலின் போது மேலாளர் சண்முக சுந்தரி மற்றும் அலுவலக ஊழியர்கள் உடன் இருந்தனர்.
நாளை தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள இரவு காவலாளி பணிக்கான நேர்முகத் தேர்வு காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. இப்பணிக்கு 180-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 10 அலுவலக உதவியாளர் மற்றும் 3 ஜீப் ஓட்டுநர் பணி இடங்களுக்கான நேர்காணல் வருகிற 29, 30, 31ம் தேதி ஆகிய 3 நாடகள் தூத்துக்குடி யூனியன் அலுவலகத்தில் நடை பெறுகிறது. இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) கலந்து கொண்டு நேர்காணலை நடத்துகிறார்.


