தூத்துக்குடி சுடலை காலனி பகுதி மக்களுக்கு வீட்டு மனை பட்டாக்களை கனிமொழி எம்பி வழங்கினார்.
தூத்துக்குடி மாநகராட்சி 43வது வார்டு பகுதிக்குட்பட்ட சுடலை காலனியில் வசிக்கும் மக்கள் வீட்டு மனை பட்டா கேட்டு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் அமைச்சர் கீதாஜீவன் நடவடிக்கையின் பேரில் 61பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி பட்டாக்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, சார் ஆட்சியர் கெளரவ் குமார், தாசில்தார் பிரபாகரன், முன்னாள் கவுன்சிலர் பாலன், கவுன்சிலர் முத்துமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


