தூத்துக்குடியில் வருகிற 24ஆம் தேதி வியாழக்கிழமை, வடக்கு மாவட்ட தி.மு.க. பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பிரதிநிதிகள் கூட்டம் வருகிற 24ஆம் தேதி வியாழக்கிழமை கலைஞர் அரங்கத்தில் காலை 10.00 மணிக்கு மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ் தலைமையில், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற உள்ளது.
சமூகநலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கீதா ஜீவன் சிறப்புரை ஆற்றுகிறார். இக்கூட்டத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் நடத்துவது, கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இதில், மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர்கழக, சார்பு அணிகளின் பிரதிநிதிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


